கிரிக்கெட் வீரர் அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது

Written by vinni   // January 29, 2014   //

download (5)அசாருதீன் இந்திய அணியில் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்தவர். ஆனால் இவரது குடும்ப வாழ்க்கை பல்வேறு திருப்பங்களை கொண்டது.

ஐதராபாத்தைச் சேர்ந்த நவ்ரீனை மணந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்து செய்தார். அதன் பிறகு நடிகை சங்கீதா பிஸ்லானியுடன் காதல் ஏற்பட்டது. அவரை 1996–ல் திருமணம் செய்து கொண்டார். 14 வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2010–ல் இருவரும் தனித்தனியாக பிரிந்தார்கள்.

பிறகு பேட்மின்டன் வீராங்கனையுடன் அசாருதீனுக்கு காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை அவர் மறுத்தார். முதல் மனைவி நவ்ரீன் மூலம் அசாருதீனுக்கு ஆசாத், சுயஷ் என இரு மகன்கள். இதில் 19 வயதான அயஷ் விபத்தில் இறந்து போனார்.

அசாருதீனின் இத்தகைய குடும்ப வாழ்க்கையையும் கிரிக்கெட்டில் அவர் சாதனைகளையும் படத்தில் கொண்டு வருகிறார்கள்.

இந்திய தயாரிப்பாளர் ஏக்தாகபூர் சமீபத்தில் அசாருதீனை சந்தித்து அவர் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கான உரிமையை வாங்கியுள்ளாராம். குணால் தேஷ்முக் இப்படத்தை இயக்குவார் என தெரிகிறது.


Similar posts

Comments are closed.