உடலுக்கு வலிமை தரும் வாழைத்தண்டு!

Written by vinni   // January 29, 2014   //

valaithandu_002அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கொண்ட வாழைத்தண்டு பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

1.கொழுப்பைக் குறைத்து வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும், ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

2.பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும்.

3.அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

4.வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

5. கொசுக்கடித்து தடிப்பு ஏற்பட்டால் வாழைத்தண்டை இரண்டாக வெட்டி, வெட்டிய பகுதியைக் கொசுக்கடித்த இடங்களில் சில நிமிடங்கள் தேய்த்தால் குணமாகும்.

6. முகப்பருவிற்கு வாழைத்தண்டை பாதியாகப் பிளந்து முகப்பருவுள்ள இடங்களில் தினமும் 2 நிமிடங்கள் தேய்த்தால் பருக்கள் நீங்கி முகம் அழகாகும்.


Similar posts

Comments are closed.