விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7

Written by vinni   // January 29, 2014   //

Boost_maxமுற்கொடுப்பனவு மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Boost நிறுவனம் Boost Max 5.7 எனும் Android Phablet இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.