விண்வெளியில் சூப்பர் நிலவு தோற்றம் 31-ம் தேதி!

Written by vinni   // January 29, 2014   //

download (3)இந்தாண்டிற்கான சூப்பர் நிலவு வரும் வெள்ளிக்கிழமை விண்வெளியில் காணலாம் என விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பூமி, சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வால் வழக்கத்தை காட்டிலும் நிலவின் அளவு பெரிதாக காணப்படும்.

இத்தைய நிகழ்ச்சிக்கு சூப்பர் நிலவு என பெயிரிட்டு அழைக்கப்படுகிறது.அத்தகைய நிகழ்வு இந்தாண்டு ஐந்து முறை நி்கழ்கிறது. இம் மாதம் முதல் தேதி நடந்து முடிந்துள்ளது.

அடுத்த நிகழ்வு வரும் வெள்ளி்க்கிழமை(31-ம் தேதி) நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூலை 12, ஆகஸ்ட் 10,செப்டம்பர் மாதம் 9-ம்தேதி ஆகிய நாட்களில் நிகழ உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி முதல் இதனை காணலாம் என விண்வெளி பவுண்டேஷனின் தலைவர் தேவ்கன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சூப்பர் நிலவு வரும் 2018-ம் ஆண்டு ஜனவரியில் தான் தோன்றும் எனவும் அவை தெரிவித்துள்ளது


Similar posts

Comments are closed.