பெண்களின் உண்மை காதலை அறியும் அதி நவீன ’பிரா’: ஜப்பானில் தயாரிப்பு

Written by vinni   // January 29, 2014   //

ae2aff4c-e715-41dd-beb2-a69754dea09d_S_secvpfபெண்களின் மன நிலையை அறிந்து அவர்களிடம் உண்மையான காதல் உள்ளதா? என்பதை கண்டறியும் அதி நவீன தொழில் நுட்ப ‘பிரா’ ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஒரு தனியார் உள்ளாடை நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த ‘பிரா’வை அணியும் பெண்களின் மனநிலையை அறிய அதில் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பெண்ணின் இதய துடிப்பு மற்றும் உடலின் வெப்பநிலையை கணக்கிட்டு அந்த வயர்லஸ் சிக்னலை செல்போனுக்கு அனுப்பும்.

அதன் மூலம் அப்பெண்ணின் மனதில் உண்மையான காதல் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த ‘பிரா’ தற்போது விற்பனைக்கு வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த ‘பிரா’ மூலம் தனது நிறுவனத்தின் உள்ளாடைகள் விற்பனையை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த ‘பிரா’ குறித்த செயல்முறை விளக்க வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.