மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும், யுத்­தக்­ குற்­ற­ச்சாட்­டுக்கள் குறித்தும் சர்­வ­தேச விசா­ரணை இன்­றி­ய­மை­யாதது – தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு

Written by vinni   // January 29, 2014   //

TNA-logoமனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும், யுத்­தக்­ குற்­ற­ச்சாட்­டுக்கள் குறித்தும் இலங்கை அர­சாங்கம் உரிய வகையில் விசா­ரணை நடத்­த­வில்லை; இனியும் நடத்­தப்­ போ­வ­தில்லை. எனவே சர்­வ­தேச விசா­ரணை இன்­றி­ய­மை­யாதது என்று தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வரு­கின்­றது.

திரு­கோ­ண­ம­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக் கட்­சியின் மத்­திய குழுக்­ கூட்டம் நடைபெற்­றது.

கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இங்கு கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், ஜெனீவா மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான சவால்­களும் அழுத்­தங்­களும் ஏற்­படும் என்­ப­த­னா­லேயே ஜனா­தி­ப­தியும் அமைச்­சர்­களும் வெளிநா­டு­க­ளுக்குச் சென்று தமக்கு ஆத­ர­வாகப் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

எனவே ஜெனீவா மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன் நாமும் வெளிநாடு­க­ளுக்கு விஜயம் செய்து எமது பிரச்­சி­னை­களை விளங்­கப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதன் மூலமே இலங்­கைக்கு தீர்க்­க­மான அழுத்­தத்­தினை ஏற்­ப­டுத்த முடியும் என்று தெரி­வித்­துள்ளார்.

இதேபோல் வட­மா­காண சபை­யிலும் சர்­வ­தேச விசா­ரணை கோரி பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. வட ­மா­கா­ண­ச­பையின் ஐந்­தா­வது அமர்வு நேற்று முன்­தினம் சபையின் தலைவர் சி.வீ.கே. சிவ­ஞானம் தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போது, மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கத்­தினால் இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

எமது மக்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட போர்க்­குற்­றங்கள், மானி­டத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், இனப்­ப­டு­கொ­லைகள் ஆகி­ய­வற்றை விசா­ரணை செய்­வ­தற்கு பக்­கச்­சார்­பற்ற பன்­நாட்டு விசா­ர­ணையை ஐக்­கிய நாடுகள் சபையின் துணை­யுடன் உரு­வாக்­கு­வ­தற்கு அனைத்­து­லக சமூகம் முன்­வ­ர­வேண்டும் என்ற பிரே­ர­ணையை இவர் முன்­மொ­ழிந்தார். இப்­பி­ரே­ரணை மாகா­ண­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட மன்னார் – திருக்­கே­தீஸ்­வரம், புதை­குழி தொடர்­பிலும் சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­ வேண்டும் என்று மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருந்தார். இந்தப் பிரே­ர­ணையும் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

முள்­ளி­வாய்க்­காலில் இறுதி யுத்­தத்தின் போது நடை­பெற்­றது இன அழிப்பு என்­பதை அர­சாங்க அதி­பர்­களின் புள்­ளி­வி­பர அடிப்­ப­டையில் ஜெனீவாவில் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் தெளிவு­ப­டுத்த வட ­மா­கா­ண­சபை முன்­வ­ர­வேண்டும் என்றும் இவர் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்­துள்ளார். இந்தப் பிரே­ர­ணையும் திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இந்தப் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­ட­ போது குறுக்­கிட்ட வட ­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் பிரே­ர­ணையில் ‘இன அழிப்பு’ என்று இல்­லாமல் ‘இன அழிப்­புக்கு ஒப்­பா­ன­தாகும்’ என்று வசனம் மாற்­றப்­ப­ட­ வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார்.

இன அழிப்பு’ என்ற சொல் சட்டச் சிக்­கலை ஏற்­ப­டுத்­தலாம். எனவே, இதனை ‘இன அழிப்­புக்கு ஒப்­பா­னது’ என மாற்­று­மாறு முத­ல­மைச்சர் பொறுப்­பு­ணர்­வுடன் கூறி அந்தப் பிரே­ர­ணையை திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­றி­யி­ருக்­கிறார்.

இவ்­வாறு வட ­மா­கா­ண­ச­பையில் சர்­வ­தேச விசா­ரணை கோரும் வகையில் பல தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சர்­வ­தேச விசா­ர­ணை­யினை கோரி­வரும் நிலையில் அர­சாங்­கமோ அத்­த­கைய விசா­ர­ணை­யா­னது நாட்டில் பெரும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் என்று கருத்துத் தெரி­வித்து வரு­கின்­றது.

போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான சர்­வ­தேச விசா­ரணை இலங்­கையில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும். 26 ஆண்டு கால மோதல்­க­ளுக்குப் பின்னர் நிலை­யான அமை­தியை நாம் உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது. இது ஒரு மென்­மை­யான, நுட்­ப­மான செயல்­ முறை­யாகும். நல்­லி­ணக்கம் என்­பது ஒன்று அல்­லது இரண்டு நாட்­களில் அடை­யக்­கூடி­ய­தல்ல.

போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து சர்­வ­தேச விசா­ர­ணை­களை நடத்­து­வதால் பழைய காயங்கள் தான் மீண்டும் கிள­றப்­படும். முன்னாள் போரா­ளிகள், இந்­திய அமை­திப்­ப­டை­யினர், இலங்கைப் படை­யினர் என்று மோதல்­களில் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பையும் விசா­ரிக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் என்று ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையில் இலங்­கைக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மூன்­றா­வது தீர்­மா­னத்தை தடுக்கும் முயற்­சியில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள லலித் வீர­துங்க, தற்­போது வாஷிங்­டன் சென்­றுள்ளார். அங்கு ஊட­க­மொன்­றுக்கு அளித்த செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

தீவி­ர­வா­தத்­தி­லி­ருந்து நாட்டை விடு­வித்த படை­யி­னரை நீதிப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும்­போது அது நாட்டில் பெரும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும். அது இரா­ணு­வத்­தி­னரின் ஒழுக்­கத்தை குறைக்­கப்­போ­கின்­றது. இந்த விட­யங்­களை மிகவும் கவ­ன­மாக ஆலோ­சிக்­க­வேண்டும் என்றும் அவர் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதேபோல், அர­சாங்க அமைச்­சர்­களும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எதி­ரான நிலைப்­பாட்­டையே கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றனர். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரி­வரும் நிலையில், அர­சாங்கம் அதற்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றது. இந்த ஏட்­டிக்­குப்­போட்­டி­யான நிலை­யா­னது ஜெனீவா மாநாடு வரையில் தொடரும் சூழலே காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்தும் உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதே சர்­வ­தே­சத்தின் கோரிக்­கை­யா­கவும் உள்­ளது.

கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன், மார்ச் மாதத்­திற்குள் இலங்கை அர­சாங்கம் சுயாதீன­மான விசா­ர­ணை­யினை நடத்­தா­விடின் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இதேபோல், இலங்கை வந்­தி­ருந்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையும் இத்­த­கைய கருத்­தினை வலியுறுத்தியிருந்தார். கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறான கருத்தினையே கொண்டுள்ளன. இந்தியாவின் நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியிருந்தார்.

சர்வதேச சமூகம் உரிய விசாரணையைக் கோரிவருவதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில், அரசாங்கமோ அதற்குக் கால அவகாசம் வேண்டுமெனக் கோருவதிலேயே குறியாக இருக்கின்றது. இதனால் தான் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

எனவே, இந்த நிலைப்பாட்டை மாற்றவேண்டுமானால் பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் செயற்படவேண்டிய சூழலே எழுந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்பாடுகள் அமைவதே இன்றைய காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.


Similar posts

Comments are closed.