தோண்டத் தோண்ட கிடைக்கும் எலும்புக் கூடுகள்

Written by vinni   // January 29, 2014   //

download (2)மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 ஆவது தடவையாக இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் இரண்டு (2) மனித எச்சங்கள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது வரை மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழி தோண்டபபட்ட போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை.

இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை.

இதே வேளை   திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு சென்ற குற்ற புலனாய்வுப்பிரிவினர் (சி.ஐ.டி) 5 ஆவது  நாளாகவும் இன்று  புதன்  கிழமை தமது விசாரனைகளை முன்னனொடுத்துள்ளனர்.;.

மீண்டும் நாளை (30-01-2014) வியாழக்கிழமை கிழமை நீதவான் முன்னிலையில் குறித்த பணிகள் 18 ஆவது தடவையாக  இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.