முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி : மக்களுக்காக அல்ல பிரபாகரனுக்காகவே – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்

Written by vinni   // January 29, 2014   //

Gunasekara_ logoமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்காக அல்ல பிரபாகரனை நினைவுகூருவதற்காகவே முதலமைச்சர் விக்னே­ஸ்வரன் நினைவுத் தூபி நிறுவப் போகின்றார் எனக் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அத்துடன் தனித் தமிழீழத்துக்கான அரசியல் நகர்வுகளை வட மாகாண சபை மெது மெதுவாக நகர்த்தி வருகிறது. இது பயங்கரமானது என்றும் அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர முள்ளிவாய்க்காலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட வேண்டுமென்றும்  வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமர­சேகர இதனைத் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.