ஜெனீவா விஜயம் குறித்து தீர்மானமில்லை – உயிர் அச்சுறுத்தல் தொடர்கிறது – ஆனந்தி சசிதரன்

Written by vinni   // January 29, 2014   //

Ananthi_Sasitharan_addresses_media_after_130658234_thumbnailஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனீவாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா விஜயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து கவனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.