தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை -அரசாங்கம்

Written by vinni   // January 29, 2014   //

downloadதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டு இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்டவிரோத ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது,

25 ஆண்டு கால பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ளது,

இலங்கை அரசாங்கப்படையினர் இரசாயன மற்றும் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

எனினும், படையினர் எந்த சந்தர்ப்பத்திலும் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.