கனடாவில் குடியிருப்பு வளாகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல்

Written by vinni   // January 28, 2014   //

download (8)கனடாவில் குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ மாகாண பொலிசார், குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து 25 கிலோ எடை கொண்ட கொக்கைன்(cocaine) என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 3 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 24 கிலோ எடையுள்ள பானசிட்டேன்(phenacetin) என்ற போதை பொருளையும் பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பத்தில் கைதான 3 பேர் ரொறன்ரோ மாகாணத்தை சேர்ந்தவர்களாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இம்மூவர் மீது தொடரப்பட்ட வழக்கு, வருகிற பிப்ரவரி 1ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வரும் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.