போப் ஆண்டவரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட ‘புனித துணித் துண்டு’ திருட்டு

Written by vinni   // January 28, 2014   //

pope_john_004போப் ஆண்டவர் 2ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதத் துண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2ம் ஜான் பால்.

இவரது ரத்தத்தில் நனைக்கப்பட்ட ‘புனித துணித் துண்டு’ ஒன்று பெட்டியில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இது மத்திய இத்தாலியின் அப்ரூஸோவில் உள்ள சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 25ம் திகதியன்று தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருளை எடுத்துச் சென்று உள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போது எல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.