பூச்சிகளை கொல்லும் எறும்புகள் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // January 28, 2014   //

ants_001அமேசான் மழைக் காடுகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் எறும்புகள் வசிக்கின்றன.

இவை தங்கள் இரையை பிடிப்பதே ஒரு விதமான பயங்கரத் திட்டமாக இருக்கிறது.

தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியில் தூண்களை போன்று மிருதுவான ப்ளாட்பார்மை அமைக்கின்றன.

மெல்லிய நார் போன்ற இழைகளால் ஆன இந்த ப்ளாட்பார்ம், பூச்சிகளை மிக எளிதாக ஒட்ட வைக்கிறது.

இதன் மேற்புரத்தில் ஆங்காங்கே பதுங்குகுழிகளை உருவாக்கி கொண்டு அதற்குள் வேலைக்கார எறும்புகள் பதுங்கி கொள்ளும்.

இந்த மிருதுவான பாதையில் இழுக்கப்பட்டு, அதன் மேல் நடந்து வரும் பூச்சிகளின் கால்களை குழிகளுக்குள் பதுங்கியிருக்கும் எறும்புகள் பிடித்து இழுத்து இவை சாகும் வரை கொட்டுகின்றன.

செத்த பின் இந்த பூச்சிகளை கொண்டு சென்று தங்கள் கூட்டில் வைத்து விடுகின்றன.


Similar posts

Comments are closed.