மாநில செஸ் போட்டி: சென்னை மாணவி சாம்பியன்

Written by vinni   // January 28, 2014   //

images (2)தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை சார்பில் பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிலையம் ஆதரவுடன் மாநில சதுரங்க (செஸ்) போட்டி சென்னையில் நடந்தது.

9 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் 6 பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் 800 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரக்காநந்தா (வேலம்மாள்), மோகனா (எஸ்.எஸ்.வி.) 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ராகுல் (ஸ்பார்டன்), ரிந்தியா (வேலம்மாள்), 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரஜேஷ் (பி.எஸ்.சீனியர் செகன்டரி), கிருத்திகா (வேலம்மாள்)., 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அஜய்கிருஷ்ணா (வேலம்மாள்) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


Similar posts

Comments are closed.