அதிகநேர தொடுதிரை பாவனையால் பிள்ளைகளுக்கு பாதிப்பு

Written by vinni   // January 28, 2014   //

smartphones_tablets_phabletsஸ்மார்ட் போன்கள், ரெப்லட் கருவிகள் போன்றவற்றை பிள்ளைகள் அதிக நேரம் பயன்படுத்துவது நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்தப் பழக்கம் அடிமைத்தனத்தைத் தூண்டி, பிள்ளைப்பராய அபிவிருத்தியைப் பாதிப்பதாக அவுஸ்திரேலிய உளவியல் நிபுணர் ஜொசலின் ப்ருவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலான நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் மூளையில் ஒருவகை இரசாயனங்கள் கூடுதலாக சுரக்கின்றன. இந்தப் போக்கு பாவனையார்களை பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்று, புறவுலகின் விடயங்களில் இருந்து தனித்து விடச் செய்கிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக், ட்விற்றர் முதலான பிரயோகங்களின் கூடுதலான பயன்பாடு நீண்டகால அடிப்படையில் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.


Similar posts

Comments are closed.