விடு­தலைப் புலி­களை அழித்­த­ போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும் – தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

Written by vinni   // January 28, 2014   //

gunadasa-amarasekaraவிடு­தலைப் புலி­களை அழித்­த­ போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும். தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பே அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கின்­றது என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

அர­சாங்­கத்­திற்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மாயின் அது முழு நாட்­டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்­சி­களும் புரிந்­து கொள்ள வேண்டும் எனவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரி­விக்­கையில்,

ஜெனீவா அழுத்­தங்­க­ளையும் நாட்டில் பிரி­வினை வாதத்­தி­னையும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பே ஏற்­ப­டுத்­து­கின்­றது. சர்­வ­தேச பிரச்­சி­னை­களைத் தூண்டி இலங்­கையில் தனித் ­தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கவே சம்­பந்தன் கூட்­டணி முயற்சி செய்து வரு­கின்­றது.

நாட்டின் பிரச்­சி­னை­யாக இருந்த விடு­த­லைப் ­புலி தீவி­ர­வா­தி­களை அழித்த போதே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பி­னையும் தடை செய்­தி­ருக்க வேண்டும். அன்று அர­சாங்கம் கவ­னிக்­காது செயற்­பட்­டமை இன்று நாட்­டிற்கே பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளது.

இன்று அர­சாங்­கத்­திற்கு இருக்கும் முக்­கிய எதிரி தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பே­யாகும். அவர்­களின் செயற்­பாட்­டினை தடை செய்ய முடி­யு­மாயின் அர­சாங்­கத்­தினால் சர்­வ­தேச பிரச்­சி­னை­களில் இருந்து இல­கு­வாக வெளி­வர முடியும்.

எனினும், ஜனா­தி­பதி இதனை செய்­யா­தி­ருப்­பது ஏன் எனத் தெரி­ய­வில்லை. அர­சாங்கம் மக்கள் தொடர்­பி­லேயே முதலில் சிந்­திக்க வேண்டும். இலங்­கையில் மக்­களின் பெரும்­பான்மை விருப்­பத்­திற்கு அமை­யவே ஆட்சி நடத்த வேண்டும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் வார்த்­தை­களைக் கேட்டு இலங்­கையில் ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.

தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பி­னரின் ஒரே எண்ணம் இலங்­கையில் தனி தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கு­வதே. திரு­கோ­ண­மலை தொடக்கம் மன்னார் வரையில் முழு­மை­யாக தன் வசப்­ப­டுத்தி இந்து சமுத்­தி­ரத்தில் தனி ஆட்சி நடத்தும் எண்­ணமே இன்று கூட்­ட­மைப்­பிற்கு உள்­ளது. இதனை அடை­யவே இன்று சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கைகோர்த்து செயற்­ப­டு­கின்­றன.

நாட்டின் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் இதனைப் புரிந்­து­கொள்ள வேண்டும். எதிர்­கால சிந்­த­னைகள் இல்­லாது தான் தோன்­றித்­த­ன­மாக அர­சியல் செய்­வதை ஐக்­கிய தேசி­யக் ­கட்சி கைவிட்­டு­ விட்டு நாட்­டிற்­காக செயற்­பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படின் அது முழு நாட்டிற்கும் பிரச்சினையேயாகும். சர்வதேச நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அது பொது மக்களையே பாதிக்கும். இதனை மக்கள் விளங்கிக் கொண்டு அரசாங்கத்துக்கு துணையாக செயற்பட வேண்டும் என்றார்.


Similar posts

Comments are closed.