அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

Written by vinni   // January 28, 2014   //

download (7)அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகள் சில இந்த ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்த உள்ளன.

கொழும்பின் முக்கிய இடங்களில் பேரணிகளை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணாமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கொழும்பு ஹைட் மைதானத்திலிருந்து ஒரு பேரணியும், கொம்பனித்தெரு, மருதானையிலிருந்து இரண்டு பேரணிகளும் ஆரம்பமாகவுள்ளன.


Similar posts

Comments are closed.