அமெரிக்காவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக‌ குற்றச்சாட்டு: ரஷிய மாணவர் கைது

Written by vinni   // January 28, 2014   //

arrest_CIரஷியாவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் டிப்டா கோவ் (18). கல்லூரி மாணவர். இவர் அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் உள்ள அல்டூனா நகரில் தங்கியிருந்து படித்து வந்தார்.

இவரை அல்டூனா நகர போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இவர் தனது வீட்டின் படுக்கை அறையில் வெடிகுண்டு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர போதை மருந்து மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களையும் பதுக்கி வைத்திருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் மரிஞ்சுனா என்ற போதை செடி வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவரது வீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 சூட்கேஸ்கள் இருந்தன.

அதை கைப்பற்றி சோதனையிட்டபோது வெடிகுண்டுகளும், அதை தயாரிக்க பயன்படுத்தும் வெடிமருந்துகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட ரஷிய மாணவர் ரூ.3 கோடி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


Similar posts

Comments are closed.