வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று கோரியதையே, இன்று விக்னேஸ்வரன் கோருகிறார்

Written by vinni   // January 28, 2014   //

vikramaவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று கோரியதையே, இன்று விக்னேஸ்வரன் கோரி வருவதாகவும் அவரது கோரிக்கை நியாயமானது எனவும் நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியமான நாட்டிற்குள் அதிகாரத்தை பரவலாக்கி ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்பதே தமிழர்களின் தேவையாக இருக்கின்றது. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ஷவை பிரபாகரனின் உடலில் உள்ள மயிருக்கும் ஒப்பிட முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அப்படியானால் ஏன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை கொலை செய்து, மகிந்த போன்ற சர்வாதிகாரியை ஜனாதிபதியாக தெரிவு செய்ய ஏன் வழி வகுத்தார் என  பொன்சேகாவிடம் கேள்வி எழுப்புகிறேன் என்றார்.


Similar posts

Comments are closed.