மன்னார் மனித புதை குழி தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம் – ஜே.வி.பி

Written by vinni   // January 27, 2014   //

mannar_skeleton_003மன்னார் பாரிய மனித புதை குழி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் பாரியளவில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

43 மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரரணை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என ஜே.வி.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளையில் 150 மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது,
எனினும், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதை குழி தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய அமைதி காக்கும் இராணுவம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஒருவரை மாறி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் குற்றம் இழைத்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள உடல் எச்சங்கள் துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எனவே சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜே.வி.பி கோரியுள்ளது.


Similar posts

Comments are closed.