இலங்கை-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

Written by vinni   // January 27, 2014   //

download (2)இரண்டு டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சென்றுள்ளது.

இலங்கை-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் மிர்புரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பலம் வாய்ந்த இலங்கை அணியில் பேட்டிங்கில் கேப்டன் மேத்யூஸ், மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா, பிரசன்ன ஜெயவர்த்தனே, கவ்ஷால் சில்வா, சன்டிமால், பந்து வீச்சில் ஹெராத், எரங்கா, சுரங்கா லக்மல் உள்ளிட்டோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

வங்காளதேச அணியை பொறுத்தவரை கேப்டன் முஷ்பிகிர் ரகிம், ஷகிப் அல்–ஹசன், தமிம் இக்பால், மக்முதுல்லா, மொமினுல் ஹக் போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், டெஸ்டில் அந்த அணி இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. இலங்கைக்கு எதிராக டிரா செய்தாலே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 14 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் 13–ல் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.


Similar posts

Comments are closed.