கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியும் புலம்பெயர் தமிழர்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Written by vinni   // January 27, 2014   //

mahinda-rajapkse1-e1352856364572புலம்பெயர் தமிழர்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதனை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் பாடசாலையொன்றின் நீச்சல் தடாக ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை கைவிட்டு நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் சேiவாயற்றுவதே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எம்மை பற்றி கண்டு கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் தற்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை விமர்சனம் செய்த சில வெளிநாட்டுத் தலைவர்களே ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை ஏற்றக் கொண்டுள்ள நிலையில், நாட்டில் பிறந்த சிலர் வென்னெடுக்கப்பட்ட சுதந்திரத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனைத்து இன மற்றும் மத மக்களும் சகவாழ்வுடன் சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறப்படுவதாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகிற்கு போலிப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சாரங்களுக்காக நேரத்தை செலவிடாது மக்களின் நலனில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்


Similar posts

Comments are closed.