தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கிய தாய்

Written by vinni   // January 27, 2014   //

download (1)சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே, வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார்.

எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் வயிற்றில் பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது 9 பெண்களுக்கு இந்த ஆபரேசன் நடந்தப்பட்டது.

அவர்களில் இப்பெண்ணுக்கு மட்டும் கருப்பை சீராக செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் இப்பெண்ணின் உடலில் உருவான முட்டையை வெளியே எடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்தனர்.

பின்னர் அந்த கரு முட்டையை உடல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பையில் பத்திரமாக வைத்தனர். தற்போது அக்கருமுட்டை வளர்ச்சி அடைய தொடங்கி விட்டது.

எனவே, கர்ப்பிணி ஆன அவர் ஒரு குழந்தையை பெற உள்ளார். இதன் மூலம், உலகிலேயே உடல் உறுப்பு மாற்று கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இந்த தகவலை ஆஸ்திரேலியா டாக்டர்கள் தெரிவித்தனர். அனால், அந்த பெண்ணின் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.


Similar posts

Comments are closed.