இலங்கைக்கு ஈரானிய நாடாளுமன்றம் ஒத்துழைப்பு

Written by vinni   // January 27, 2014   //

downloadஇலங்கையுடன் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படப் போவதாக ஈரானின் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு கொள்கை தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் அலேடீன் பொரொஜ்ஜேடி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இலங்கையின் தூதுவர் மொஹமட் பைசால் ரிசானுடன நேற்று ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில்; இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான உறவுள்ளது. அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனை கருத்திற்கொண்டு ஈரான், இலங்கைக்கென தனியான வெளிநாட்டுக் கொள்கையை வகுத்துள்ளதாக நாடர்ளுமன்ற தலைவர் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.