என்னவிலை கொடுத்தாலும் கிடைக்காத “அம்மாவின் பாசம்”

Written by vinni   // January 26, 2014   //

son_mother_china_001தள்ளாத வயதிலும், படுத்தபடுக்கையாய் கிடக்கும் மகனை 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறார் சீனாவை சேர்ந்த மூதாட்டி.

கிழக்கு சீனாவின் அன்ஹீய் மாகாணத்தில் வசிப்பவர் 98 வயது மூதாட்டி ஸ்ழாங்.

இவரது 60 வயது மகன், கடந்த 20 ஆண்டுகளாக பக்கவாத நோயால்(பெரலைஸிஸ்) பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக கிடக்கிறார்.

இத்தனை ஆண்டுகளாகவும் தாயன்பு என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து வருகிறது.

மகனுக்கு உணவு ஊட்டுவது, அவரது மல-ஜலத்தை துடைத்து சுத்தம் செய்வது என இந்த தள்ளாத வயதிலும் பணிவிடை செய்து வரும் இந்த மூதாட்டியை ‘தாய்மையின் அடையாளம்’ என்று சீன மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

இவரைப்பற்றி கேள்விப்பட்ட சில சமூக ஆர்வலர்கள், தாங்களாகவே முன்வந்து நிதி திரட்டி 1 லட்சம் யுவான்களை அந்த குடும்பத்துக்கு அன்பளிப்பாக வழங்க சென்றனர்.

வறுமை நிலையானாலும், தனது சொந்த பணத்தில் வாழ்வதையே விரும்பும் அந்த சீன மூதாட்டி, பணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து நிதி வழங்க வந்தவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்துள்ளார்.


Similar posts

Comments are closed.