பத்மஸ்ரீ விருது பெறும் யுவராஜ்

Written by vinni   // January 26, 2014   //

yuvaraj_test_002இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகிய இருவரும் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பயஸ் ஏற்கனவே விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்ம விருது பெறும் வீரர், வீராங்கனைகள் விவரம்:

பத்ம பூஷண்: கோபிசந்த் (பாட்மிண்டன்), லியாண்டர் பயஸ் (டென்னிஸ்).

பத்ம ஸ்ரீ: அஞ்சும் சோப்ரா (கிரிக்கெட்), சுனில் தபாஸ் (கபடி), லவ் ராஜ் சிங் தர்மசக்து (மலையேற்றம்), தீபிகா பல்லிக்கல் (ஸ்குவாஷ்), போனிஃபேஸ் பிரபு (சக்கர நாற்காலி டென்னிஸ்), யுவராஜ் சிங் (கிரிக்கெட்), மம்தா சோதா (மலையேற்றம்).


Similar posts

Comments are closed.