மக்களை ஏமாற்றிய மருத்துவருக்கு சிறைத்தண்டனை

Written by vinni   // January 26, 2014   //

jailஅமெரிக்காவில் மருத்துவ காப்பீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிஸ்சிகன் பகுதியை சேர்ந்தவர் அமெரிக்கவாழ் இந்தியர் சிரதீப் குப்தா.

பிசியோதெரபிஸ்ட் ஆன இவருக்கு வயது 39, இவர் தனது நண்பர்களுடன் இணைந்து ஹோம் ஹெல்த் கேர் என்ற நிறுவனம் ஆரம்பித்தார்.

இதன் மூலம் கடந்த 2012ம் ஆண்டில் மருத்துவ காப்பீடு தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.

அதாவது, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வெற்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கி பணமோசடி செய்துள்ளனர், இதன் மூலம் 70 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து குப்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளதுடன், மோசடி செய்த 62 கோடி ரூபாயை உரியவர்களிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.