இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகள் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்க உள்ளார்

Written by vinni   // January 26, 2014   //

navaneetham-pillai-5-380x270ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைககளை சமர்ப்பிக்க உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ம் அமர்வுகளிலும், ஆணையாளரின் ஆண்டறிக்கையிலும் இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடப்பட உள்ளது.

அமர்வுகளில் இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை எதிர்வருமு; மார்ச் மாதம் 26ம் திகதி சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிவிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நவனீதம்பி;ள்ளை தமது அறிக்கைகளில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நர்டுகள் அமைப்பின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பிலான பொறிமுறைiயை உரிய முறையில் அமுல்படுத்தி, உரிமைகளை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கம் என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.