சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானம் ஜெனிவாவில் – அதிகாரபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா

Written by vinni   // January 26, 2014   //

Geneva-flagஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் சிசன், இம்மாதம் முதல் வாரத்தில் தமக்குத் தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்தே, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.