அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: மூவர் பலி

Written by vinni   // January 26, 2014   //

amaricaஅமெரிக்காவின் கொலம்பியா புறநகர் பகுதியான பால்டிமோரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம மனிதன் புகுந்து, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட மூவர் மரணமடைந்துள்ளனர். அதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து மீட்கப்பட்டன.

எனவே, அவன் தாக்குதல் நடத்திய நபராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வணிக வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடந்தபோது உயிருக்குப் பயந்து கடைகளிலும், உணவகங்களிலும் பதுங்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.