சீனாவில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 14 பேர் பலி

Written by vinni   // January 25, 2014   //

downloadசீனாவின் மேற்கு பகுதி எல்லையில் அமைந்துள்ள ஜின்ஜியாங் மாகாணம் போராளிகள் நடமாட்டமுள்ள பகுதிகளாகும். கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையோரகமாக உள்ள ஜின்ஹெ பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இங்குள்ள மக்களை கலாச்சார ரீதியாக நசுக்குவதாகவும், ஹான் சீனர்களை இப்பகுதியில் குடியேற்றுவதாகவும் குற்றம் சாட்டும் போராளிக்குழுக்கள் அரசுக்கு எதிராக தீவிரத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று மாலை இப்பகுதியின் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன. கத்திகளுடன் வந்த கலகக்காரர்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது 6 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூன் மாதம் இம்மாகாணத்திலுள்ள தர்பன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 35 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.