இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா, சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி

Written by vinni   // January 25, 2014   //

sainaஇந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், சீனாவைச் சேர்ந்த ஷுவான் டெங்கை எதிர்கொண்டார்.

இதில் சாய்னா 21-14, 17-21, 12-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றார். இவ்வெற்றியை பெற சாய்னாவுக்கு ஒரு மணி நேரமும் 19 நிமிடங்களும் தேவைப்பட்டது.

இதேபோல் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, பெனெட்ரியை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-6, 12-21, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதனால் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா- சிந்து மோதுகிறார்கள்.

சாய்னா கடந்த 12 மாதங்களுக்குப்பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.