காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: கத்தி முனையில் காதலனிடம் சிக்கித் தவித்த காதலி….

Written by vinni   // January 25, 2014   //

lover_knife_001.w245சீனாவில் காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக் கைதியாக பிடித்து வைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

32 வயதான இந்த நபர் 29 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் இரு வீட்டிலும் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் மிரட்டி கட்டடமொன்றின் கூரைமேல் நிற்க வைத்துள்ளார்.

இதை நூற்றுக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்த வேளை அவன் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றான். தனது காதலியையும் ஆடைகளைக் களையுமாறு உத்தரவிட்டான். இதற்கிடையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் பொலிஸார் அங்கு வந்து நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.


Comments are closed.