பிரதமரை பதவி விலகுமாறு மனோ கணேசனும் கோருகின்றார்

Written by vinni   // January 25, 2014   //

mano ganeshasn abபிரதமர் டி.எம். ஜயரட்னவை பதவி விலகுமாறு, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் கோரியுள்ளார்.

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்கும் வரையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

பிரதமரின் பெயர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது எனவே விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அவர் எந்தவிதமான பதவிகளையும் வகிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தியவருக்கு கம்பளையில் அமைந்துள்ள வீட்டில் விருந்துபசாரம் வழங்கியதாக பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டியது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.