அனைவரையும் வாய் பிளக்க வைத்த சாப்பாட்டு ராமன்

Written by vinni   // January 25, 2014   //

china_man_king_eat_002சீனாவில் 15 நிமிடத்திலேயே 40 பிளேட் நூடுல்ஸை சாப்பிட்டு நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தின் லியூயங் என்ற பகுதியை சேர்ந்தவர் பான்யிஷ்காங்(வயது 45).

இவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள குங்பு பள்ளி ஒன்றில் ‘நூடுல்ஸ்’ சாப்படும் போட்டி நடைபெற்றது.

இதில் ஏராளமானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஆனால், போட்டி தொடங்கிய 15 நிமிடத்தில் பான்யிஷ்காங், 40 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட்டு முடித்ததுடன் “Big Stomach King” என்ற பட்டத்தையும் பெற்றார்.

மேலும் 25 பிளேட் நூடுல்ஸ் சாப்பிட தொடங்கும் போது போட்டியில் எதிர்ப்பாளர் யாரும் இல்லாததால் போட்டியை நிறைவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 40 பிளேட் நூடுல்ஸை தான் சாப்பிட்டு முடிப்பதாக கூறியபடி சாப்பிட்டு வெற்றி வாகை சூடினார்.


Similar posts

Comments are closed.