கடவுள் தந்த பரிசு “இன்டர்நெட்”

Written by vinni   // January 25, 2014   //

pope_001உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இன்டர்நெட் கடவுள் தந்த பரிசு என பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.

கத்தோலிக்க தேவாலயங்களில் கடந்த 1967ம் ஆண்டு முதல் உலக தொலைதொடர்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள தகவலில், இண்டர்நெட் என்பது கடவுளின் பரிசு, அதன் மூலம் உலகமே ஒரு குடும்பம் போல் உருவாகிறது.

ஆனால் அதை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சாத்தானின் வேலை.

இவற்றை மக்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள், ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள்.

இண்டர்நெட் மூலம் ஏராளமான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் பிரச்சனைகள் உருவாகின்றன, இது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

9 மொழிகளில் டுவிட்டர் கணக்கை வைத்துள்ள பிரான்சிஸை, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.