ராதிகாவின் இலங்கை பயணத்தை மல்கெயார் நியாயப்படுத்தியுள்ளார்!

Written by vinni   // January 25, 2014   //

rathiகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கு சென்று வந்த விடயத்தை என்டிபி கட்சியின் தலைவர் டொம் மல்கெயர் நியாயப்படுத்தியுள்ளார்

ராதிகா தமது இலங்கை பயணத்தின்போது இலங்கை அரசாங்கத்தை அசௌகரித்துக்கு உள்ளாக்கினார் என்று கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இலங்கை உயர்ஸ்தானிரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராதிகா தமது தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருந்த போதும் அங்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக என்டிபி கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தாம் இலங்கையில் கைதுசெய்யப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியதாக ராதிகா குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை மறுத்திருந்த இலங்கையின் கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகிஸ்வரா, ராதிகாவே இலங்கை அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் பதிலளித்துள்ள என்டிபி கட்சியின் தலைவர் மல்கெயார், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் உலகில் இன்று முக்கிய கவனத்தை பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு இணங்கவேண்டும் என்று முல்கெயார் கோரியுள்ளார்


Similar posts

Comments are closed.