ஆஸி பிரதமர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பில் தரையிறக்கப்பட்டது

Written by vinni   // January 25, 2014   //

1298945473Untitled-1அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டோனி அப்போட் பயணித்த விமானம் சற்று நேரத்திற்கு தரையிறக்கப்பட்டது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் சற்று நேரம் தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த அவுஸ்திரேலிய பிரதமர் அப்போட், விமான நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வழியில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்டை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ன மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ, நாமல் ராஜபக்ஸ ஆகியோர் சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமும் விமான நிலையத்தில் சந்த்தித்து உரையாடியதாகவும், ஓய்வுக்குப் பின் உடனடியாகவே அவர் புறப்பட்டுச் சென்றார் எனவும் தெரியவருகிறது. வரவேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதே வேளை பொருயாதார மாநாட்டில் மேற்கத்தேய தலைவர்கள், முக்கியஸ்த்தர்களைச் சந்தித்த அவுஸ்ரேலியப் பிரதமரிடம், மேற்குலகம் மகிந்தவுக்காண செய்தி எதனையும் அனுப்பி வைத்ததா என்ற சந்தேகம் கொழும்பு அரசியல் வானில் சுடர்விட்டு பிரகாசிப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

குறிப்பாக அவுஸ்ரேலியப் பிரதமரோடு இலங்கை கொண்டுள்ள நட்பின் நிமித்தம் மகிந்தவுக்கான எச்சரிக்கை எதையாவது மேற்குலகம் அனுப்பி வைத்திருக்குமா? என்பதனை சற்று பொறுத்திருந்தே பார்கலாம் எனவும் அத்தகவல் கூறுகிறது.


Similar posts

Comments are closed.