இலங்கைக்கு வந்து உடனடியாக திரும்பி சென்ற ஆஸி. பிரதமர்

Written by vinni   // January 24, 2014   //

1298945473Untitled-1அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இன்று இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று (24) முற்பகல் 11.47 அளவில் இலங்கை வந்து மீண்டும் 2.00 மணியளவில் புறப்பட்டுச் சென்றதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சுவிசர்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு டொனி அபோட் சென்று கொண்டிருந்போது, அவர் பயணித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த அவுஸ்திரேலிய பிரதமரை வரவேற்க, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜூ.எல்.பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் முட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Similar posts

Comments are closed.