நரியை பாசமாக வளர்த்து வரும் தம்பதியினர்

Written by vinni   // January 24, 2014   //

fox_002பிரான்சில் இளம் நரி ஒன்றை தம்பதிகள் ஒருவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.
பிரான்சில் கடந்த 2010ம் ஆண்டில் நடந்த கார் விபத்து ஒன்றில் நரி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

அப்போது அவ்வழியே வந்த டைடிய டலேன்ஸ் என்பவர், இறந்த நரியின் அருகிலிருந்த இளம் நரியை தன் வீட்டிற்கு எடுத்து சென்றார்.

இவரும் இவரது மனைவி ஆனியும், Zouzou என்ற இந்த இளம் நரியை பாசத்துடன் வளர்த்து வந்தனர்.

இதையறிந்த பிரான்ஸின் வேட்டை மற்றும் காட்டு விலங்குகள் தேசிய அலுவலம்(The National Office of Hunting and Wild Animals) இத்தம்பதிகள் மீது, சட்டத்திற்கு புறம்பாக காட்டு விலங்கினை வளர்த்த காரணத்திற்காக வழக்குபதிவு செய்தது.

இவ்வழக்கில் 300 யூரோக்கள்(409 டொலர்கள்) அபராதம் விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இதனை செலுத்திய தம்பதியினர் நரியை தங்களிடமே இருக்க வேண்டுமென கோரி நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் மகிழ்ச்சி வெள்ளத்தில், நரியை மிகவும் அன்புடனும், அரவணைப்புடனும் வளர்த்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.