நீதிமன்ற வளாகத்தில் இரட்டை கொலை

Written by vinni   // January 24, 2014   //

court_attack_002ஜேர்மனில் நீதிமன்ற வளாகத்தில் இருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனின் பிராங்க்பர்ட் நகர நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென இருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் துப்பாக்கியால் சுடப்பட நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், கத்தியால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார், சம்பவ இடத்தில் கத்தியும் துப்பாக்கியும் வைத்திருந்த 47 வயது மதிக்கதக்க நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இதனையடுத்து இத்தாக்குதலின் பின்னணியை அறிய பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Similar posts

Comments are closed.