6 பேரை காப்பாற்றிய சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்

Written by vinni   // January 24, 2014   //

us_boy_002அமெரிக்காவில் 6 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவன் தீயில் கருகி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கிழக்கு ரோசெஸ்டர் பகுதியை சேர்ந்த சிறுவன் டைலர் தூகன்(வயது 8).

இவன் பென்பீல்டு நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் நேற்று முன்தினம் தங்கியிருந்தான், அப்போது இரவு நேரத்தில் திடீரென படுக்கை அறையில் தீப்பிடித்தது.

இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக எரிந்து கொண்டிருந்த நெருப்புக்குள் பாய்ந்து சென்ற சிறுவன், தீயில் சிக்கியிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தான்.

ஆனால் வயதான தாத்தாவால் வெளியே வர முடியவில்லை, அவரை தூக்கி கொண்டு வந்த போது, தீயில் சிக்கியதால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தான்.

தூகன் இறுதி சடங்குக்கும், அவனது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் ஒன்லைனில் நிதி திரட்டுகின்றனர், இதுவரை ரூ. 17 லட்சம் நிதி சேர்ந்துள்ளது.

6 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுவனின் வீரச்செயலால் பெருமை அடைந்த போதிலும், அவனின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.