புதிய கோணத்தில் ஆண் பெண் உறவுகள்

Written by vinni   // January 24, 2014   //

jongensvriendschap4ஆண் பெண் நட்பு புதிய கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணியிடங்களில் நட்பு பாராட்ட வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நட்பு, பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், திருமணமான பின்பு இன்னொரு மாதிரியாகவும் பார்க்கப்படுகிறது.

“திருமணமானாலும், திருமணமாகாவிட்டாலும் நட்பு எப்போதும் நட்புதான். அதில் ஒரு வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் மற்றவர்களின் பார்வையில்தான் அது வித்தியாசமாகப்படுகிறது” என்கிறார்கள், திருமணமான பெண்கள்.

“ஒர்க் பிரண்ட்ஷிப் என்பது புதிய விஷயம் அல்ல, பழைய காலத்திலும் ஒன்றாக வேலை செய்யும் ஆண் பெண்களிடம் அந்த நட்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் அதைப் பற்றி வெளிப்படையாக பேசிக்கொள்ளமாட்டார்கள். இப்போது வெளிப்படையாக பேசும் சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது.

வேலைக்காக வெளியே செல்லும் பெண்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுடன் நட்பு இருந்தே ஆகவேண்டும். வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விட்டாலே ஆண்கள் மத்தியில்தான் இருந்தாகவேண்டும். பெரும்பகுதி நேரத்தை அங்குதான் செலவிடுகிறோம்.

சுக துக்கம் அனைத்தையும் அங்கே அவர்களோடு பங்கிட்டுத்தான் ஆகவேண்டியதிருக்கிறது. திருமணம் என்பது ஆண் நட்பிற்கு தடையில்லை. நல்ல ஆண் நண்பர்கள் கிடைத்தால், அவர்கள் ஆலோசனைப்படி கல்யாண வாழ்க்கையையும் சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம்”.

ஆண் பெண் நட்பு பற்றி நான் மற்றவர்களைப்போல் மேலோட்டமாக மட்டும் பேசவிரும்புவதில்லை. ஒரு பெண் பத்து நண்பர்களிடம் பழகுகிறாள் என்றால், யாராவது ஒருவரிடம் செக்ஸ் ரீதியான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும்.

ஒருவேளை அதுபோல் எதிர் தரப்பில் அந்த ஆணுக்கும் ஏற்படும். அப்போதுதான் இருவருக்குள்ளும் சொல்லக்கூடிய, சொல்லமுடியாத சில மாற்றங்கள் ஏற்படும். காதல்வசப்படுவார்கள். இது இருவருக்கும் திருமணமாகவில்லை என்றால் சாதாரணமானதுதான். யாராவது ஒருவருக்கு திருமணமாகி இருந்தாலோ அசாதாரணமாகிவிடுகிறது.

பெண்கள், தோழிகளிடம் என்னவேண்டும் என்றாலும் பேசலாம் ஆண் நண்பர்களிடம் அவ்வாறெல்லாம் பேச முடியாது. ஆண் நண்பர்களில் நிறைய பேர் அவசியமில்லை. அப்படியே ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தாலும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் நட்புவைத்திருக்க வேண்டியதிருக்கிறது.

ஏன்என்றால் ஒருவரிடம் பேசினால் இன்னொருவருக்கு பிடிப்பதில்லை. ‘என்னை ஏன் மறந்தாய்?’ என்று கேட்டு டென்ஷன் ஆக்கிவிடுவார். திருமணத்திற்கு பிந்தைய ஆண் பெண் நட்பிலும் சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கிறது!


Similar posts

Comments are closed.