பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் கைது

Written by vinni   // January 24, 2014   //

biber_arrest_002அமெரிக்காவின் பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர், 18 வயதான இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இளம்பெண்களின் மனதை கொள்ளை கொண்ட பைபர், மிகவேகமாக கார் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அதாவது, தெற்கு புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை பகுதியில் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓட்டி வந்தார்.

இந்த பகுதியில் மணிக்கு 30 கிலோமீற்றருக்கு மேல் ஓட்டக்கூடாது என வேக கட்டுப்பாடு உள்ளது.

மேலும் அவர் தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தி இருந்தார், மறிஞ்சுனா என்ற போதை சிகெரட்டும் புகைத்து உள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை கைது செய்தனர், ஜஸ்டின் பைபருடன் அவரது நண்பர் கலீல் ஷெரீப்பும், பிரபல மொடல் அழகி ஒருவரும் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.


Similar posts

Comments are closed.