வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்து முக்கிய புலி உறுப்பினர் தப்பியோட்டம்

Written by vinni   // January 24, 2014   //

ltteவிடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபருக்கு பூந்தோட்டம் புனர்

வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

பிரகாஷ் என்ற இந்த நபர் இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்ததுடன் சில வருடங்களுக்கு முன்னர் இரகசியமான முறையில் இலங்கை திரும்பியிருந்தார்.

நாடு திரும்பிய இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஒப்படைக்கப்பட்டு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவர் யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர். தப்பிச் சென்றுள்ள இவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய சகல தகவல்களும் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.


Similar posts

Comments are closed.