பிரித்தானியா போர்க்குற்றம் தொடர்பில் பதிலளிக்க வேண்டும்: ஐரோப்பிய மனித உரிமைகள் நிலையம்

Written by vinni   // January 24, 2014   //

9781903307229எதிர்வரும் மார்ச்சில் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவை மாநாட்டின் போது இலங்கையைப் போன்று, பிரித்தானியா ஈராக்கில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என்று தாம் நம்புவதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலையத்தின் ஜேர்மனை தளமாகக்கொண்ட ஆலோசகர் அன்ரேன்ஸ் சுக்லர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

2003- 2008 ஆண்டு காலப் பகுதியிலேயே பிரித்தானியா, ஈராக்கில் போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானியா அது தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை நடத்தவில்லை.

இந்தநிலையில் தமது நாடுகள் மேற்கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையை போன்று பிரித்தானியாவும் பதில் வழங்கவேண்டும் என்று சுகலர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.