ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4–வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து வெற்றி

Written by vinni   // January 24, 2014   //

4ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தொடக்கம் சிறப்பாக இருந்தது.

கேப்டன் கூக் 44 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் பெல்– ஸ்டாக்ஸ் ஜோடி நிதானமான ஆடி ரன்களை சேர்த்தது. 50 ஓவரின் போது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 316 ரன் குவித்தது.

பின்னர் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கி விளையாடியது மார்ஷ் (15) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த வேட் (23), பெய்லி (11) நிலைக்கவில்லை.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஞ்ச் 108 ரன் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (26), கிறிஸ்டியன் (23) மட்டும் ஓரளவு கைகொடுத்தனர்.

பின்வரிசை வீரர்களான பால்க்னர் (2), ஜான்சன் (6) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 47.4 ஓவரில் 259 ரன்களுக்கு ‘ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் 3 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.


Similar posts

Comments are closed.