இலங்கையில் சீன மற்றும் இந்தியர்கள் அதிகளவில் கடமையாற்றி வருகின்றனர்.

Written by vinni   // January 24, 2014   //

nimal_ciசீன மற்றும் இந்தியர்கள் அதிகளவில் இலங்கையில் கடமையாற்றி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 33440 சீனப் பிரஸைகளுக்கும் 23790 இந்தியப் பிரஜைகளுக்கும் வீசா வழங்கப்பட்டுள்ளதாக அமைச்ர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் பணி புரிவதற்காக இந்த வீசா வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் 32 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களில் பெருமளவிலான இந்தியர்கள் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று 23790 சீனப் பிரஜைகளும் இலங்கையில் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு மேலதிகமாக 3505 பிரித்தானியர்களும், 500 ஜப்பானியர்களும், 1875 தென் கொரியப் பிரஜைகளும் இலங்கையில் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். விசேட நிபுணத்துவ சேவைகளை வழங்குவதற்காக பெருமளவிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் சேவை பெற்றுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.