அரையிறுதியில் நடால், பெடரர்

Written by vinni   // January 23, 2014   //

nadal_federer_002அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால்(ஸ்பெயின்), 22ம் நிலை வீரர் டிமித்ரோவை(பல்கேரியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 3–6, 7–6, 7–6, 6–2 என்ற செட் கணக்கில் தனக்கு கடும் சவால் அளித்த 22 வயதான டிமித்ரோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

பெடரர் வெற்றி

மற்றொரு காலிஇறுதி ஆட்டத்தில் 6ம் நிலை வீரர் ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து), 4ம் நிலை வீரர் ஆன்டி முர்ரேவை(இங்கிலாந்து) சந்தித்தார்.

18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறிவைக்கும் பெடரர் 6–3, 6–4, 7–6 (8–6) 6–3 என்ற செட் கணக்கில் முர்ரேவை சாய்த்து 11வது முறையாக அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தார்.


Similar posts

Comments are closed.