குழந்தைகளுக்கு தடை விதித்த பிரதமர்

Written by vinni   // January 23, 2014   //

cameron_kids_002இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது குழந்தைகளுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் குழந்தைகள் நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ்.

இவர்களுக்கு கமரூன் பல்வேறு தடைகளை விதித்துள்ளார், முக்கியமாக காலை வேளையில் தொலைக்காட்சி மற்றும் வார விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்ககூடாது என கூறியுள்ளார்.

எப்போதும் டிஸ்னி சேனலை விரும்பி பார்க்கும் குழந்தைகள் தற்போது, இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டுகளிக்கின்றனர்.

கமரூனின் மகள் நான்சி படம் வரைவதில் ஆர்வம் உள்ளவராகவும், மகன் எல்வென் கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறியுள்ளனர்.

இந்த தடை அவர்களை வேறு ரசனைகள் கொண்டவர்களாக மாற்றியுள்ளது என்று கமரூன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.